Thursday, October 30, 2008

இலக்கின்றி பறக்கும் சிந்தனைப் பறவை *

வாழ்கiயில் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத செல்வம் எது ? - என்னுடைய வாழ்வியல் பயிற்சி முகாமுக்கு வருபவர்களிடம் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி இது *

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள். நான் சொல்வது - இந்தக் கணம்.. இந்த விநாடி.. இதுதான் நிலையானது. இந்த விநாடியை யாருமே நம்மிடமிருந்து பிhpக்க முடியாது. ஆனால், ஞஇந்தக் கணத்தைஞ இதோ நம்மைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் இந்த விநாடியை நம்மில் பலர் முழுமையாக அனுபவிப்பதில்லை என்பதுதான் நெஞ்சைச் சுடும் உண்மை. ஏனென்றhல், நமது சிந்தனை பாதி வேளை, கடந்த காலத்தில் நிலைத்து இருக்கிறது.. அல்லது அது வருங்காலத்தைப் பற்றிய கவலையில் தோய்ந்து போயிருக்கிறது.

வீட்டில் இருக்கும்போது, ஆபீஸைப் பற்றிச் சிந்திக்கிறோம். சாப்பிடும்போது கூட நமது சிந்தனை சாப்பாட்டில் இருப்பதில்லை. குளிக்கும்போது கூட, ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கும் அற்புதமான உடம்பை நாம் பார்த்து ரசிப்பதில்லை. அது இன்றைய தேதிக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருப்பதை எண்ணி சந்தோஷப்படுவதில்லை. அப்போதுகூட இலக்கில்லாமல் பறக்கும் பறவையாக மாறி எங்கேயோ சிறகடிக்கிறது * இதனால் ஏற்படும் விளைவு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள் * எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டு ரோட்டில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படுகிறதே. அதே மாதிரி விபத்துக்கள் நம் வாழக்கையில் வேறுவேறு விதமாக நடந்து விடும். இப்படி நான் சொல்வதால், இறந்தகாலத்து நினைவுகளைப் புறக்கணிக்கச் சொல்லவில்லை. வருங்காலத்தைப் பற்றித் திட்டம் போட வேண்டாம் என்றும் தடுக்கவில்லை. ஆவி பறக்கும் சூடான ஃபில்டர் காபியைச் ருசித்து ருசித்து அதன் ஒவ்வொரு துளியையும் நாக்கின் சுவை மொட்டுக்களால் உணர்ந்து சாப்பிடுவதைப் போலத்தான் ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் வாழ்;க்கையையும் விநாடி, விநாடியாக அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

வாழ்க்கை என்பது காபியைவிடப் பல ஆயிரம் மடங்கு சுவையானது. காபியின் முதல் சிப்புக்கும் இரண்டாவது சிப்புக்கும் அதிக வித்தியாசம் இருப்பதில்லை. ஆனால், வாழ்க்கையில் ஒரு விநாடியைப் போல் அடுத்த விநாடி இருப்பதில்லை. ஒவ்வொரு விநாடியும் வித்தியாசமானது. ஒரே நதியில் நீ இரண்டு முறை குளிக்க முடியாது என்று ஜென் புத்திசத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, நதியில் ஒர் இடத்தில் ஓடுகிற நீர். அடுத்த விநாடி வேறு இடத்துக்கு மாறி விடுவது மாதிரி. வாழ்க்கையும் விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டே இருக்கிறது.

படிப்பு, அறிவு, ஆற்றல் மட்டும் இருந்தால் போதாது, நிகழ்காலத்துக்கு ஏற்ப விழிப்பு உணர்வும் வேண்டும். விழிப்பு உணர்வு மட்டும் இல்லையென்றhல் ஒருவன் எத்தனை திறமைகள் படைத்திருந்தாலும். அது அவனுக்குப் பலன் தராமல் போய்விடும். அதனால்தான் பொpய கம்பெனிகளில் வேலைக்கு மனுச் செய்திருப்பவர்களுக்கு Presence of Mind இருக்கிறதா என்று பல்வேறு விதங்களில் சோதனை செய்கிறார்கள்.

ஒரு பெரிய இசை வித்தகர் இருந்தார். அவர் வயலினை எடுத்து வாசித்தால். பாலைவனத்தில்கூட மழை பெய்யும். ஒரு முறை அவர் ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்குப் போயிருந்தார். அங்கே ஒரு சர்க்கஸ் கலைஞர் வயலின் வாசிக்க, கரடி டான்ஸ் ஆடியது, சர்க்கஸ் பார்க்க வந்திருந்தவர்கள் ஒட்டு மொத்தமாக எழுப்பிய கரகோக்ஷம் கூடாரத்தையே அதிர வைத்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நமது வயலின் வித்தகர். அந்த சர்க்கஸ் கலைஞரை அணுகி. ஞநன்கு பழக்கப்பட்ட கரடியை மட்டும்தான் உன் வயலின் இசைக்கு ஏற்ப உன்னால் டான்ஸ் ஆட வைக்க முடியும். ஆனால், என் வயலின் இசை. எந்த மிருகத்தையும் நடனமாட வைக்கும்ஞ என்று கூறினார். சர்க்கஸ் கலைஞர் அதைப் பேத்தல் என்று மறுக்க இருவருக்கும் இடையே பேச்சு வளர்ந்து, அங்கே ஒரு போட்டியே ஆரம்பமானது.

வயலின் வித்வானின் எதிரில் சர்க்கஸ் கலைஞர், முதலில் ஒரு சிங்கத்தை அனுப்பினார். வித்வானின் வயலின் இசை கேட்டுச் சிங்கம் சுற்றிச் சுழன்று ஆடத் தொடங்கியது. சர்க்கஸ் கலைஞர், அடுத்த ஒரு சிறுத்தையை அனுப்பினார். அதுவும் வித்வானின் வயலின் இசைக்குத் தன்னை மறந்து ஆடியது. சர்க்கஸ் கலைஞர் அடுத்து ஒரு புலியை அனுப்பினார் வயலின் வித்வான் சற்றும் பதறhமல் வயலினை வாசிக்கத் தொடங்கினார் ஆனால், அந்தப் பாழும் புலி, வயலின் இசைக்கு மயங்கவில்லை, மாறாக அது வித்வானை நோக்கி ரத்த வெறியோடு நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது, பதறிப்போன பார்வையாளர்கள் கூட்டம் சிதறி ஓடியது. நமது வித்வானும் தனது வயலினைக் காற்றிலே வீசிவிட்டு கடைசி நிமிடத்தில் தலைதெறிக்க ஓடி, அதிர்ஷ்டவசமாக அந்தப் புலியிடம் இருந்து தப்பித்துக் கொண்டார்.

புலி, பயிற்சியாளர்களால் சாமார்த்தியமாக மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது, மரண பயத்திலிருந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட வயலின் வித்வான், சர்க்கஸ் கலைஞரிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் என்றாலும், தனது இசை அந்தப் புலியைக் கட்டுப் படுத்தாது தனக்குப் பொpய புதிராகவே இருப்பதாக அவர் சொல்ல சர்க்கஸ் கலைஞர் சிhpத்தபடியே கூறினார்.

காரணம் ரொம்ப எளிமையானது, அது செவிட்டுப் புலி அதுமட்டுமல்ல, பிறவியிலேயே அதற்குக் காது துவாரமும்... ஏன், காது மடல்களே கூடக் கிடையாது. வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் கூட புலிக்குக் காது இல்லை என்பதைச் சில விநாடிகளுக்குள் கவனித்து தப்பிக்க முயன்று ஓடியது. ஆனால், உங்கள் வாசிப்பின் மீது வைத்த அபார நம்பிக்கையால், நீங்கள் கடைசி நிமிடம் வரை கண் திறந்து புலியைச் சரியாகப் பார்க்கத் தவறிவிட்டீர்கள் *

No comments: