Thursday, November 27, 2008

யார் குற்றவாளி ?

யார் குற்றவாளி ?

பார்க்கும் சக்தி என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆனால் நாம் நமது கண்களின் முழு அருமையையும் உணருவது கிடையாது. கண்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்துவதைவிட தூங்குவதற்கு அதிகம் பயன்படுத்துகிறவர்கள் உண்டு. கண்கள் திறந்திருக்கும்போதே எதிரில் தெரியும் காட்சியைச் சரியாகப் பார்க்காமல் கனவுலகில் சஞ்சரிப்பபவர்களுக்கும் உண்டு *

சரி.. தூங்கவும் இல்லை * கனவும் காணவில்லை அப்போதாவது எதிரில் தெரியும் காட்சி, நம் கண்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிகிறதா ? அதுவும் பலருக்குத் தெரிவதில்லை. கண்ணிலே ஏதாவது ஒரு கலர் கண்ணாடி மாட்டிக் கொண்டு பார்ப்பவர்கள் அதிகம். கலர் கண்ணாடி என்று நான் குறிப்பிடுவது அவரவரது Perception உறவினர்கள,; நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அறிந்தவர்கள,; தெரிந்தவர்கள் விஷயங்களைப் பார்ககும்போது எந்தவித முழுமையான ஆதாரமும் இல்லாமல் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் அபிப்பிராயங்கள் தான் Perception

நிர்வாக இயல் வொர்க் - ஷாப்களில் ஒவ்வொருவரின் Perception எப்படி இருக்கிறது என்பதைப் புரியவைக்க சின்ன சின்ன புதிர்கள் போடுவார்கள். அதிலிருந்து உங்களுக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்.

ரோமானிய முறைப்படி ஒன்பது என்பதை IX என்று எழுதுவோம் இல்லையா ? இதில் எங்கேயாவது ஒரே ஒரு கோடு மட்டும் சேர்த்து இந்த ஒன்பதை ஆறு என்று மாற்ற வேண்டும் கட்டுரையை மேலே படிப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் செலவு செய்து ஒரே ஒரு கோடு போட்டு ஒன்பதை ஆறாக மாற்றுவது உங்களால் முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.

விடை இதுதான்

IX என்பது ரோமானிய முறைப்படி ஒன்பது சரி. இதையே ஆங்கில எழுத்துக்களாக நினைத்துக் கொண்டு இரண்டாம் முறை பாருங்கள் I மற்றும் Xஎன்ற இரு எழுத்துக்கள் தெரிகிறதா ? அதன் முன்னால் s என்ற ஆங்கில எழுத்தைச் சேருங்கள்.

ஆகா.. ஒன்பது ஆறாகிவிட்டது *

ஒரு கோடு மட்டும் சேர்க்கலாம் என்று சொன்னவுடன் நம்மில் பலருக்கு நேர்க்கோடுதான் நினைவுக்கு வரும் ஏன்.. Sஎன்பது வளைவான ஒரே கோடுதான். ஆனால் அது சிலருக்கு அப்படி நினைவுக்கு வருவதில்லை. சிலருக்கு இது சட்டென்று தோன்றிவிடும். விடுகதைக்கு விடை கண்டுபிடிக்க Perception எப்படி நமக்குத் தடையாக இருக்கிறதோ அதே மாதிரிதான் கண்ணுக்கு எதிரே தெரியும் காட்சிகளின் உண்மையான பின் அர்த்தங்களையும் இந்த நமக்கு நிறம் மாற்றிக் காட்டிவிடும்.

இந்தக் கதையைப் பாருங்கள்..

அது கொடிய விலங்குகள் நிறைந்த பயங்கர காடு * அங்கே ஒரு விறகு வெட்டி * அவனுக்கு ஒரு மனைவி * அவள் ரொம்பவும் அழகானவளும் ஆனால், விறகு வெட்டும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் குடித்து விட்டு தன் மனைவியை அடிப்பதுதான் அவனுக்கு வேலை * மனைவிக்கோ நாளுக்கு நாள் வாழ்க்கை கசந்துபோய்க் கொண்டிருந்தது. கணவன் வெட்டிப் போடும் விறகுகளை பரிசலில் ஏற்றிக் கொண்டு ஆற்றின் மறுகரைக்குப் போய் விற்று அதில் கிடைக்கும் காசிலிருந்து அரிசி, பருப்பு வாங்கி வந்து வீட்டில் சமையல் செய்ய வேண்டும். இதுதான் அவளது அன்றhட வேலை. காலப்போக்கில் எதிர்க்கரையில் இருந்த மளிகைக்கடைக்காரனுக்கும் விறகு வெட்டியின் மனைவிக்கும் மௌ;ள ஒரு நட்பு துளிர்த்து வளர ஆரம்பித்தது.

அன்று அமாவாசை. வழக்கத்தைவிட அதிகமாகக் குடித்து விட்டு வந்த விறகுவெட்டி, மனைவியைக் கொடூரமாக அடித்து உதைத்துக் கொடுமை படுத்த ஆரம்பித்தான். இவனிடம் பட்;ட அவஸ்தைகள் போதும் என்று மனைவி அந்த நட்ட நடு இரவில் வீட்டை விட்டு வெளியே வருகிறhள். அப்போது அவள் மனதில் கரைக்கு அந்தப் பக்கம் இருக்கும் மளிகைக் கடைக்காரனிடம் போய் விடலாம் என்று ஆற்றைக் கடக்க பரிசல் வேண்டும் விறகு வெட்டியின் மனைவி பரிசல்காரனைப் போய் எழுப்புகிறாள். பரிசல்காரனோ இவளுக்காகத் தன் தூக்கத்தைத் தியாகம் செய்யத் தயாராக இல்லை.

பரிசல் இல்லை என்றால் என்ன ? இரண்டு மைல் தூரம் ஆற்றோரமாக நடந்தால் ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் இருக்கிறது. அதன் வழியாகப் போய்விடலாம்ஞஎன்று இவள் நினைக்கிறhள். மரப்பாலத்தின் அருகே சிறுத்தை ஒன்று உலவுவதாகப் பலர் சொன்னது இவளின் நினைவுக்கு வருகிறது என்றhலும் அதைப் பற்றி கவலைப்படாமல் அவள் மரப்பாலம் நோக்கி நடக்கிறhள் *

அடுத்த நாள் காலை புலியால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாக மரப்பாலத்தின் அருகே அவள் உடல்.

இந்தக் கதையை உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் படித்துக் காட்டுங்கள். கடைசியில் விறகு வெட்டியின் மனைவி சாவுக்கு யார் காரணம் என்று தனித்தனியே கேட்டுப் பாருங்கள்.

நாசமாகப் போன அந்தக் குடிகார விறகு வெட்டிதான் * என்பர் ஒருவர். இன்னொருவர் ஒழுக்கம் கெட்ட விறகு வெட்டியின் மனைவி, தானே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாள் * என்பார். மூன்றாமவர், உதவிக்கு வரமறுத்த இரக்கமற்ற பரிசல்காரன் என்பார் * விறகு வெட்டியின் மனைவியைத் தவறான நடத்தைக்கு ஈர்த்த மளிகைக்கடைக்காரன் தான் குற்றவாளி என்றும் யாராவது சொல்லக் கூடும் ஒரே கேள்விக்கு ஏன் இத்தனை விடைகள் ? ஏனென்றால் எல்லோருக்கும் ஒவ்வொரு Perception
நள்ளிரவில் ஓங்கி உயர்ந்து நிற்கிற ஓர் அரசமரத்தின் அடியிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறபோது உங்களுக்கு முதலில் அதன் கிளைகள் தொpயலாம். இலைகள் தொpயலாம் அதையெல்லாம் ஊடுருவிப் பார்க்கிற போதுதான் இலைகளுக்கு அப்பால் மறைந்திருக்கிற நிலாவின் பிரகாசம் தெரியும்.

அதுபோல் எந்த விஷயத்திலுமே எடுத்த எடுப்பில் உங்கள் Perceptionஒரு மனிதன் அல்லது அவனது செயல் மீது படிந்து. உண்மைக்கு மாறான தோற்றத்தையும் ஏற்படுத்தும்.

அந்த முதல் பார்வையை மனதுக்குள் வாங்காமல், நிதானத்தோடு விருப்பு வெறுப்புகள் இல்லாமல் தெளிவான மனநிலையில் அதே காட்சியை மீண்டும் அசைபோட்டுப் பார்த்தால்தான் பார்த்ததன் உண்மை உங்களுக்கு புரியும்.

இன்னும் மின்னும்.........

No comments: